பதிவு செய்த நாள்
08 ஜூலை2016
04:33

புதுடில்லி : எச் அண்டு எம் இந்தியா, ஊழியர்களின் எண்ணிக்கையை, 1,000 ஆக அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த எச் அண்டு எம் இந்தியா நிறுவனம், பேஷன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, உலகம் முழுவதும், 4,000 கடைகள் உள்ளன. இவற்றில், 1.48 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இந்தியாவில் தற்போது, கர்நாடகா மாநிலம் – பெங்களூரு; பஞ்சாப் – மொஹாலி உள்ளிட்ட ஆறு இடங்களில் கடைகள் உள்ளன. இவற்றில், 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு, எச் அண்டு எம் திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள், மும்பையில் மூன்று, பூனாவில் இரண்டு; சென்னையில் ஒரு கடை என, புதிதாக ஆறு கடைகளை துவக்க முடிவு செய்து உள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையையும், 1,000 ஆக அதிகரிக்கவும் முடிவு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|