பதிவு செய்த நாள்
08 ஜூலை2016
04:34
சென்னை : ஜெர்மனி நாட்டை சேர்ந்த, பி.எஸ்.எச்., ஹோம் அப்ளையன்சஸ், வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, சென்னையில், ஆண்டுக்கு, மூன்று லட்சம் பொருட்கள் தயாரிக்கும் திறன் உடைய, தொழிற்சாலை உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு, 1.50 லட்சம், வாஷிங் மிஷின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில், உற்பத்தி திறனை அதிகரிக்க உள்ளது இந்நிறுவனம். இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, ‘பிரண்ட்லோடு’ வகை வாஷிங் மிஷினுக்கான தேவை, ஆண்டுக்கு, 30.5 – 40 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். எங்களின் மொத்த உற்பத்தியில், 20 சதவீதம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|