பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:30

புதுடில்லி : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, பிளாஸ்டிக் திடக் கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, அபாயகரமான மற்றும் இதர கழிவுகள் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட அளவில், பிளாஸ்டிக் அல்லது கலப்பு பிளாஸ்டிக் கழிவுகளை, சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் இறக்குமதி செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இறக்குமதி செய்ய, இந்தியாவில் அனுமதி இல்லை. எனினும், குறிப்பிட்ட துறையில் உள்ள நிறுவனங்கள் மட்டும், அவசியம் கருதி, அபாயகரமான கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. அதற்கு, அபாயகரமான கழிவுகளை அனுப்பும் நாட்டின் அனுமதி கடிதமும், மத்திய அரசின் ஒப்புதலும் தேவை. அபாயகர கழிவுகளை, மறுசுழற்சிக்கும், மறுபயன்பாட்டு பொருளை உருவாக்கவும் பயன்படுத்த வேண்டும் என, பல நிபந்தனைகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|