பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:31

புதுடில்லி : ‘நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாதம், 1.62 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய மே மாதத்தில், பணவீக்கம், 0.79 சதவீதமாக இருந்தது. பழங்கள், காய்கறிகள், பருப்பு, சோளம், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால், பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும், தேயிலை, பால், மாமிசம், மீன் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, மதிப்பீட்டு மாதத்தில், உருளைக்கிழங்கு விலை, 64.48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், உணவு சாரா பொருட்கள், எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. தயாரிப்பு பொருட்கள் விலை அடிப்படையிலான பணவீக்கம், மிகக் குறைவாக, 0.2 சதவீதம் என்ற அளவிற்கே அதிகரித்துள்ளது. கடந்த மாதம், பாசிப்பருப்பு, மசூர் பருப்பு, கம்பு, கோழி, பன்றி, மாட்டிறைச்சி ஆகியவற்றின் விலை சற்று சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|