பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:49

புதுடில்லி : பாரம்பரிய நிறுவனங்களில், உயர் பதவி வகிப்போர், வயது, அனுபவம் ஆகியவற்றில், மூத்தவர்களாக இருப்பர். அவர்களிடம் பணிபுரிந்து, பணி நடைமுறைகளை கற்றுக் கொள்ளவே பெரும்பான்மையானோர் விரும்புவர்.
இதற்கு நேர்மாறாக, தற்போதைய சூழல் உள்ளது. குறிப்பாக, வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் உள்ள இளைஞர்களின் கீழ் பணிபுரியவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இது, டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஆய்வறிக்கை விவரம்: ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆண் ஊழியர்கள், இளம் மேலதிகாரிகளின் கீழ் பணியாற்றவே விரும்புகின்றனர். பெண்களில், 52 சதவீதம் பேர், இத்தகைய பணிச்சூழலை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இளம் மேலதிகாரிகள், பணியில் உள்ள சங்கடங்களையும், யதார்த்த நிலையையும் புரிந்து கொண்டு, தோழமையுடன் செயல்படுவதால், அத்தகையோரின் கீழ் பணியாற்ற அதிகமானோர் விரும்புகின்றனர்.
அதேசமயம், ஒரு நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு, திறமையான இளைஞர்கள் மட்டுமின்றி, சிக்கலான பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வு காணும் அனுபவம் உள்ள மூத்தவர்களும் தேவைப்படுகின்றனர். வாகனத் துறையில் தான், வயதில் மூத்த, அனுபவம் வாய்ந்த மேலதிகாரிகள் தேவை என, அதிகபட்சமாக, 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஐ.டி., மற்றும் ஐ.டி., சாரா துறைகளில் முறையே, 69 சதவீதம் மற்றும் 58 சதவீதம் பேர், இளம் மேலதிகாரிகள் தேவை என, கூறியுள்ளனர்.
பல்வேறு துறைகளில், 57 சதவீதத்திற்கும் அதிகமான, புதியவர்களும், சற்று பணி அனுபவம் உள்ளோரும், இளம் மேலதிகாரிகளை விருப்பத்தேர்வு செய்துள்ளனர். அதேசமயம், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள், மூத்த மேலதிகாரிகளிடம் பணிபுரியவே விரும்புகின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|