பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:50

புதுடில்லி : ‘‘யூரேஷிய பொருளாதார கூட்டமைப்பு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு, விரைவில் துவங்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: அர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, யூரேஷிய பொருளாதார கூட்டமைப்புடன், இந்தியா, தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, யூரேஷிய நாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, அறிக்கை அளித்துள்ளது.
ரஷ்யாவுடன்...அதை, இந்தியா பரிசீலித்து, கருத்துரை வழங்கியுள்ளது. இதை, யூரேஷிய நாடுகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக பரிசீலித்து, அவற்றின் ஒட்டுமொத்த கருத்தை தெரிவிக்க வேண்டும். அதற்காக இந்தியா காத்திருக்கிறது. கருத்துரை கிடைத்ததும், விரைவில் பரஸ்பர பேச்சு துவங்கும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு, இந்தியா, அதிக அளவில் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்தியா, ஏற்கனவே, ரஷ்யா உடன், வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து திட்டம் தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறது.
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், மும்பையின் நவசேவா பகுதியில் இருந்து, ஈரானின் பந்தர் அப்பாஸ், ரஷ்யாவின், அஸ்த்ரகன் நகரங்கள் வழியே, அசர்பைஜானின் பாகு நகருக்கு சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள முடியும்.இதன் மூலம், ஏற்றுமதி செய்ய வசதி வாய்ப்பற்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு, நேரடியாக பொருட்களை அனுப்பும் வசதியை இந்தியா பெறும்.
பரஸ்பர வர்த்தகம்:இது, இந்தியா மற்றும் யூரேஷிய கூட்டமைப்பு நாடுகளின் பரஸ்பர வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும். சமீபத்தில் மேற்கொண்ட ரஷ்ய பயணம், பல ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு வித்திட்டுள்ளது. இந்தியா – ரஷ்யா இணைந்து, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், முதன் முதலாக, உள்நாட்டில், ‘கமோவ் 226டி’ ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்க உள்ளன.இத்திட்டத்தை, ரஷ்யாவின் ரோஸ்டெக் நிறுவனமும், இந்தியாவின், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியா – ரஷ்யா பரஸ்பர வர்த்தகம், 618 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த, 2000 – 2016ம் நிதியாண்டுகள் வரை, ரஷ்யா, இந்தியாவில், 118 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|