பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:21

புதுடில்லி : ‘வங்கிகள், வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய ரூபாய் நோட்டுகளை, ஒரு நாளைக்கு, 20 எண்ணிக்கை வரை இலவசமாக மாற்றி தரலாம்’ என, ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள கிழிந்த, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, நல்ல ரூபாய் நோட்டுகளை வாங்கி வருகின்றனர். அப்போது, ஒரு நாளைக்கு, அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை, 20 எண்ணிக்கை வரை அதிகபட்சமாக, 5,000 ரூபாய் மதிப்பிற்கு, இலவசமாக மாற்றி தர வேண்டும். அதற்கு மேல் மாற்றப்படும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு, குறைந்த அளவில் சேவை கட்டணம் வசூலித்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளில், தற்போது ஒரு நாளைக்கு, அதிகபட்சமாக, ஐந்து எண்ணிக்கை உடைய கிழிந்த ரூபாய் நோட்டு மாற்றி தரப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|