பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:23

சென்னை : செயின்ட் கோபைன், வறுமையில் உள்ள ஏழை மாணவர்களுக்கு, தொழில் பயிற்சி அளித்து, வேலையும் வழங்கி உள்ளது. இதுகுறித்து, செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் தெற்காசியா, மலேஷியா, எகிப்து நாடுகளுக்கான பிளாட் கிளாஸ் பிரிவு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தானம் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வறுமையில் உள்ள மாணவர்களுக்கு, ‘டிப்ளமோ இன் மேனுபேக்சரிங் டெக்னாலஜி’ என்ற உற்பத்தி சம்பந்தமான பயிற்சி வழங்கி வருகிறது. நான்கு ஆண்டுகள் கொண்ட பயிற்சி காலத்தில், மாணவர்கள், அவர்களின் குடும்பத்திற்கு தனியாக உதவி தொகை வழங்கப்படுகிறது. நம் கல்வி முறையில், பாடம் நடத்துவதுடன், தொழில் பயிற்சியையும் வழங்குவதன் மூலம், கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 1,800 கோடி ரூபாயை நிறுவன வளர்ச்சிக்காக முதலீடு செய்யவுள்ளது இந்நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|