பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:25

புதுடில்லி : எல் அண்டு டி டெக்னாலஜி நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. எல் அண்டு டி குழுமத்தைச் சேர்ந்த, எல் அண்டு டி இன்போடெக் நிறுவனம், 705 ரூபாய் – 710 ரூபாய் என்ற விலையில், சமீபத்தில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, எல் அண்டு டியின் மற்றொரு துணை நிறுவனமான, எல் அண்டு டி டெக்னாலஜியும், பங்கு வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம், வரைவு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு மேலாண்மை பணிகளை, எஸ்.பி.ஐ., கேப்ஸ், ஜே.எம்.பைனான்சியல், கோட்டக் மகிந்திரா, பேங்க் ஆப் அமெரிக்கா, மெரில் லின்ச் ஆகியவை மேற்கொள்ள உள்ளன. எல் அண்டு டி டெக்னாலஜி, கடந்த நிதியாண்டில், 47 கோடி டாலர் வருவாய் ஈட்டிய நிலையில், நடப்பு நிதியாண்டில், 52.50 கோடி டாலர் வருவாய் ஈட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|