பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:35

மும்பை : இந்தியாவில், பழைய ஆடைகள் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், மேலும், 200 நிறுவனங்களுக்கு இறக்குமதி உரிமம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு, இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கமான – சி.எம்.ஏ.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட துணிகள், ஆடைகள் ஆகியவை, இரு பிரிவுகளின் கீழ், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன்படி, பயன்படுத்த முடியாத அல்லது சேதமான துணிகள் மற்றும் ஆடைகளை, மத்திய அரசின் அனுமதியின்றி இறக்குமதி செய்யலாம். பயன்படுத்தக் கூடிய பழைய ஆடைகளின் இறக்குமதிக்கு, மத்திய அரசின் உரிமம் தேவை. பழைய ஆடைகள் மதிப்பு கூட்டப்பட்டு, 100 சதவீதம் மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், இந்த உரிமம் வழங்கப்படுகிறது.
குஜராத்தில், கன்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள, 16 நிறுவனங்களுக்கு மட்டும், பயன்படுத்திய பழைய துணிகளை இறக்குமதி செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. உள்நாட்டில், புதிய ஆடைகளுக்கு, 15 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதேசமயம், இறக்குமதியாகும் பழைய ஆடைகளுக்கு, 10 சதவீத வரி அல்லது எண்ணிக்கை அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவிற்கு பழைய ஆடைகளை கடத்துவது அதிகரித்துள்ளது. சென்னை, கோல்கட்டா, மும்பை துறைமுகங்கள் வழியாக கடத்தி வரப்படும் பழைய ஆடைகள், சுங்க அதிகாரிகளிடம் சிக்கினாலும், மிகக்குறைந்த அபராதமே விதிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில், பழைய ஆடைகள் இறக்குமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது; மாதந்தோறும் சராசரியாக, 90 சரக்கு பெட்டகங்களில், தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய ஆடைகள் இறக்குமதியாவதாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பயன்படுத்தப்பட்ட, ‘பிராண்டட்’ ஆடைகள், ‘பேக்டரி செகன்ட்ஸ்’ என்ற பெயரில், தள்ளுபடி விலையில் விற்கப்படுவதும், உள்நாட்டு ஆடைகள் விற்பனையை பாதித்துள்ளது. இத்தகைய சூழலில், நாட்டில் உள்ள இதர சிறப்பு பொருளாதார மண்டலங்களைச் சேர்ந்த, மேலும், 200 நிறுவனங்களுக்கு பழைய ஆடைகளை இறக்குமதி செய்யும் உரிமம் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, சி.எம்.ஏ.ஐ., தலைவர் ராகுல் மேத்தா கூறியதாவது: இறக்குமதியாகும் பழைய ஆடைகளால், உள்நாட்டில் அமைப்பு சார்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் திட்டம், உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையை படு பாதாளத்திற்கு தள்ளி விடும். அதனால், பழைய ஆடைகள் இறக்குமதியில், மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, மத்திய அரசிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
‘டாப் 5’ நாடுகள்
பழைய ஆடைகள் ஏற்றுமதி இறக்குமதிஅமெரிக்கா இந்தியாபிரிட்டன் ரஷ்யாஜெர்மனி பாகிஸ்தான்தென்கொரியா மலேஷியா பெல்ஜியம் உக்ரைன்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|