பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:38
புனே : கைனடிக் குழுமம், இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், 250 சொகுசு இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த நிறுவனம் கைனடிக் குழுமம். 40 ஆண்டுகளுக்கு முன், மிகக் குறைந்த விலையில், ‘லுானா’ எனும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம். இப்போது இதே நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில், விலை உயர்ந்த, 250 சொகுசு இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இதில், இதுவரை, 24 வாகனங்களை ஏற்கனவே விற்பனை செய்து உள்ளது. இந்த நிறுவனத்திற்கு, அகமது நகரில், இருசக்கர வாகனம், ‘அசெம்பிள்’ செய்யும் ஆலை உள்ளது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து, சொகுசு இருசக்கர வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ‘அசெம்பிள்’ செய்யப்படுகின்றன. கைனடிக் குழுமத்தின் துவக்க நிலை சொகுசு இருசக்கர வாகனத்தின் விலை, மூன்று லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|