பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:36
சென்னை : மிட்சுபிஷி எலிவேட்டர், கர்நாடக மாநிலம், பெங்களூரில், ‘லிப்ட்’ தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இவா ஓடா கூறியதாவது: ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் குழுமத்தின் ஓர் அங்கம் தான், மிட்சுபிஷி எலிவேட்டர் இந்தியா. எங்கள் நிறுவனம், பெங்களூரில், வெங்கல் என்ற இடத்தில், ‘லிப்ட்’ எனப்படும் மின் துாக்கி, தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. ஆண்டுக்கு, 5,000 லிப்ட் தயாரிக்கும் திறன் உடையது இத்தொழிற்சாலை. இந்த ஆலையில், குறைந்த மற்றும் நடுத்தர உயரம் கொண்ட கட்டடங்களில் பயன்படுத்தும் லிப்ட்கள் தயாரிக்கப்படும். இந்தியாவில், ஆண்டு தோறும், 50 ஆயிரம் லிப்ட்கள் தேவைப்படுகின்றன. எனவே, எங்கள் நிறுவனம், பெங்களூரில் உற்பத்தி செய்யப்படும் லிப்ட்களை, இந்தியாவில் மட்டும் விற்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|