பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:28
புதுடில்லி : ஆதித்ய பிர்லா நிறுவனம், ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் களமிறங்கி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஆதித்ய பிர்லா பைனான்சியல் சர்வீசஸ், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த எம்.எம்.ஐ., ஸ்ட்ரேடஜிக் இன்வெஸ்மென்ட் நிறுவனமும் இணைந்து, ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளன. இந்நிறுவனம், ஹெல்த் இன்சூரன்ஸ் வணிகத்தில் ஈடுபடுவதற்காக, ஐ.ஆர்.டி.ஏ., என்ற காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு அமைப்பிடம், பதிவு செய்திருந்தது. இந்நிலையில், அண்மையில் அந்த நிறுவனத்திற்கு, பதிவு செய்ததற்கான சான்றிதழை, ஐ.ஆர்.டி.ஏ., வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்தியாவில் ஆறாவது ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமாக, ஆதித்ய பிர்லா உருவெடுத்து உள்ளது. ஏற்கனவே, ஹெல்த் இன்சூரன்சில், ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ், ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|