பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:34

புதுடில்லி : மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அதுலேஷ் ஜிந்தால் கூறியதாவது: இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு, வருமான வரி துறையும், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் விதத்தில், தற்போது, துரித சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விண்ணப்பித்த ஒரே நாளில், ‘பான்’ எனப்படும், வருமான வரி கணக்கு எண் வழங்கப்படும். அதுபோல, ‘டான்’ எனப்படும், வருமான வரி கழிவுக்கான கணக்கு எண்ணும், விண்ணப்பித்த ஒரே நாளில் கிடைக்கும். காகித ஆவணங்கள் எதுவுமின்றி, ‘டிஜிட்டல் கையெழுத்து’ மூலம், இந்த வசதியை பெறலாம். இது, சாதாரண நபர்களின் பான் எண் விண்ணப்பத்திற்கும் பொருந்தும். அத்தகையோருக்கு, டிஜிட்டல் கையெழுத்து வசதி இல்லாதபட்சத்தில், ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் கையெழுத்து வசதியை பயன்படுத்தி, பான் எண் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|