பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:35

புதுடில்லி : கணக்கு தணிக்கை நிறுவனங்களை மாற்றும் விதிமுறையை, பெரும்பான்மையான நிறுவனங்கள் பின்பற்றாமல் உள்ளன.
இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் கணக்கு தணிக்கை விதிமுறைகளை, சர்வதேச தரத்திற்கு நிகராக மாற்றும் நோக்கில், புதிய நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, 20 கோடி ரூபாய்க்கு மேல், அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் கொண்ட இந்திய நிறுவனத்தின் கணக்குகளை, 10 ஆண்டுகள் வரை மட்டுமே, ஒரு நிறுவனம் தணிக்கை செய்யலாம். அதன்பின், வேறு ஒரு கணக்கு தணிக்கை நிறுவனத்தை, இந்திய நிறுவனம் அமர்த்திக் கொள்ள வேண்டும்.
இது, 2014 ஏப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள போதிலும், புதிய நடைமுறைக்கு மாற, நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, வரும் 2017, ஏப்., 1ம் தேதி முதல், புதிய விதிமுறைக்கு நிறுவனங்கள் மாற வேண்டும். ஆனால், 18 சதவீத நிறுவனங்கள் மட்டுமே, இதுவரை, புதிய கணக்கு தணிக்கை நிறுவனங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக, கிரான்ட் தார்ன்டன் இந்தியா நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், ஆய்வில் பங்கேற்ற, 78 சதவீத நிறுவனங்கள், சுழற்சி முறையில் தணிக்கை நிறுவனங்களை மாற்றும் திட்டத்தை வரவேற்று உள்ளன.
புதிய திட்டத்திற்கு மாற உள்ளதாக, 82 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள, 1,480 நிறுவனங்களில், 131 நிறுவனங்கள் மட்டுமே, கடந்த நிதியாண்டில், கணக்கு தணிக்கை நிறுவனங்களை மாற்றிஉள்ளன. இதனிடையே, சுழற்சி முறை தணிக்கையாளர் திட்டத்தை, மேலும் சில காலம் தள்ளிவைக்குமாறு, மத்திய அரசுக்கு, சில நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|