பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
15:12

சென்னையில், கடந்த ஆண்டு நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின், தமிழகத்திற்கு இதுவரை, 45 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைத்துள்ளது.இதுகுறித்து, தமிழக தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், கடந்த ஆண்டு நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது, இங்கு முதலீடு செய்வதாக உறுதியளித்த நிறுவனங்களுடன், சில தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், சில நிறுவனங்கள் முழுவதுமாக இயங்க துவங்கியிருப்பதும்; பல நிறுவனங்கள் இயக்கத்தை துவங்கும் நிலையில் இருப்பதும்; மேலும் பலர், நிலங்களை வாங்கி முதல் கட்ட பணிகளை துவங்கி இருப்பதும் தெரிந்தது. அவர்களின் தேவை குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், இதுவரை, 45 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|