பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
07:09
நியூயார்க் : அமெரிக்காவின், ‘பார்ச்சூன்’ இதழ், வருவாய் அடிப்படையில், உலகளவில் மிகப்பெரிய, 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 161வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 5,470 கோடி டாலர். தனியார் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், 215வது இடத்தில் உள்ளது. டாடா மோட்டார்ஸ், 226வது இடத்திலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 232வது இடத்திலும் உள்ளன. பாரத் பெட்ரோலியம், 358வது இடத்திலும், இந்துஸ்தான் பெட்ரோலியம், 367வது இடத்திலும் உள்ளன. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், முதன்முதலாக, இந்த பட்டியலில் இணைந்து, 423வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், 48,213 கோடி டாலர் விற்றுமுதலுடன், முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|