பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
15:46

கோவை : ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானில் வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனை 160 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் (வீடு மற்றும் சமையலறைப் பிரிவு) சுமித் சகாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து வகைப் பொருள்களையும் ஒரே தளத்தில் இருந்து பெறக் கூடிய வகையில் அமேசான் டாட் இன் நிறுவனம், 2013இல் தொடங்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நூற்றுக்கணக்கான பிரிவுகளில் 6.5 கோடிக்கும் அதிகமான பொருள்கள் இடம்பெற்றுள்ளன. இதில் வீட்டுப் பொருள்கள் பிரிவில் மட்டும் 40 லட்சத்துக்கும் அதிகமான பொருள்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தப் பிரிவுகளில் மட்டும் 160 சதவீத அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே கோவையில் தான் அதிக அளவில் ஆன்லைன் விற்பனை நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் பொருள்கள் தாமதமின்றி அவர்களைச் சென்றடையும் வகையில் தமிழகம் முழுவதும் எங்களுக்கு 6,000 விற்பனையாளர்கள் உள்ளனர் என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|