பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
23:35

புதுடில்லி : டில்லி அருகே, கிரேட்டர் நொய்டாவில், ‘இந்திய பேஷன் ஜூவல்லரி அண்டு அக்சசரிஸ்’ கண்காட்சியை, மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் அஜய் தம்தா துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:பேஷன் நகைகள், ஆடைகள் உள்ளிட்டவற்றை தயாரிப்போர், தரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், உறுதி அளித்தபடி, குறித்த காலத்தில் அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும். இதன் மூலம், பேஷன் நகைகள், ஆடைகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியில், இந்தியா, குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி காணும். கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், பேஷன் ஜூவல்லரி மற்றும் பொருட்கள் ஏற்றுமதி, 2,502 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2015 – 16ம் நிதியாண்டில், 10.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,755 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பேஷன் நகைகள் மற்றும் பொருட்கள் துறை, கிராமப்புற கைவினைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|