பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
23:37

சென்னை : ‘‘இந்தியா – இந்தோனேஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வணிகம், 2,100 கோடி டாலர் என்றளவில் உள்ளது,’’ என, இந்தியாவிற்கான, இந்தோனேஷியா துாதர் ரிசாலி வில்மர் இந்த்ராகேசுமா தெரிவித்தார். சென்னை, வடபழனியில் உள்ள, போரம் விஜயா மாலில், இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், ‘ரிமார்க்கபிள் இந்தோனேஷியா எக்ஸ்போ’ எனும் கண்காட்சியை, அந்நாட்டின் துாதர் ரிசாலி வில்மர், நேற்று துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி, 24ம் தேதி வரை நடக்கிறது. பின், அவர் பேசியதாவது: இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி, உருக்கு உள்ளிட்ட பொருட்களை, இந்தியா இறக்குமதி செய்கிறது. ஜவுளி, இயந்திர தளவாடங்களை இந்தியா, இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வணிகம், 2,100 கோடி டாலர் என்றளவில் உள்ளது. கண்காட்சிகள் நடத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம் மேலும் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|