பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
23:38

மும்பை : வங்கி, நிதி நிறுவனங்கள் ஆகியவை, ‘சிபில்’ நிறுவனத்தின் கடன் தகுதி அறிக்கையின் அடிப்படையில் தனி நபருக்கு கடன்களை வழங்குகின்றன. தனிநபர் கடன், கல்விக் கடன், வீட்டுவசதி கடன் உள்ளிட்ட எந்தவொரு கடன் கோரினாலும், வங்கிகள், முதலில், ‘சிபில்’ அறிக்கையை பரிசீலித்து தான் முடிவு எடுக்கின்றன. இதற்காக, கடன் பெறுவோரிடம், 550 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இனி, இது ஆண்டுக்கு ஒரு முறை, இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் கூறியதாவது: இந்த ஆண்டு இறுதிக்குள், சிபில் நிறுவனம், தனிநபருக்கு இலவச கடன் தகுதி அறிக்கை வழங்கும் பணியை துவக்கும் என, தெரிகிறது. ஆண்டுக்கு, ஒரு முறை வழங்கும் இந்த இலவச கடன் தகுதி அறிக்கையை பின்பற்றி, ஒருவர் தன் கடன் தகுதி மதிப்பீட்டை அறியலாம். அதில் ஏதாவது குறைபாடுகளை கண்டால், அது குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|