பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
23:41
புதுடில்லி : இந்துஸ்தான் யுனிலிவர், அரிசி ஏற்றுமதி வணிகத்தை முழுவதுமாக, எல்.டி., புட் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், 1985ம் ஆண்டு முதல், பிரீமியம் வகை பாசுமதி அரிசியை, ‘கோல்டு சீல் இண்டஸ் வேலி’ என்ற பெயரில், மத்திய கிழக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்ட வெளிநாடுகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் தன் அரிசி ஏற்றுமதி வணிகத்தை, எல்.டி., புட்ஸ் என்ற நிறுவனத்திற்கு முழுவதுமாக விற்பனை செய்ய முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தம், இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில், கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது. இதற்கு, இந்திய போட்டி ஆணையம், மே, 12ம் தேதி, ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, அரிசி ஏற்றுமதி வணிகத்தை, எல்.டி., புட்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடைமுறை முழுவதுமாக முடிந்து விட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|