பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
23:43

மும்பை : மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், 4ஜி சேவை, அறிமுகமாக இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தற்போது, 4ஜி சேவையை, சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளது. இதை வணிக ரீதியாக அடுத்த மூன்று மாதங்களில், அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, ரிலையன்ஸ் ஜியோ அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிலையன்ஸ் ஜியோ சேவையை, சரியான நேரத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, வரும் அக்., மாதம் முதல், பண்டிகை காலம் துவங்குகிறது. எனவே, அப்போது வணிக ரீதியாக, 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். ஏற்கனவே, மொபைல் டேட்டா சேவையில், இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளோம். எங்கள் நிறுவனம், மாதந்தோறும், 10 கோடி வாடிக்கையாளர்கள் தலா, ஐந்து ஜி.பி., ‘டேட்டா’ பயன்படுத்துவதை எளிதாக கையாளும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|