பதிவு செய்த நாள்
23 ஜூலை2016
01:09

புதுடில்லி : நிப்பான் பெயின்ட்ஸ், இத்தாலி நிறுவனத்துடன் சேர்ந்து, புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.
நிப்பான் பெயின்ட்ஸ் நிறுவனம், 15 நாடுகளில், பெயின்ட் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, நிப்பான் பெயின்ட்ஸ், இத்தாலி நாட்டை சேர்ந்த ஐ.வி.எம்., கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் மரச்சாமான்களுக்கான, ‘பாலீஷ்’ மற்றும் பெயின்ட்டுகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, என்.ஐ.பி.எஸ்.இ.ஏ., குழும தலைமை செயல் அதிகாரி சீவ் கிம் கூறியதாவது: எங்கள் நிறுவனம், தனித்துவமான பொருட்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. தற்போது, மரச்சாமான்கள், பாலீஷ்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே, அந்த தயாரிப்பை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன் மூலம், இந்தியாவில், மரச்சாமான் பாலீஷ் சந்தையில், நாங்கள் முக்கிய நிறுவனமாக திகழ்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|