தனியார் முத­லீ­டு­களை விட அரசு முத­லீடு அதி­க­ரிப்புதனியார் முத­லீ­டு­களை விட அரசு முத­லீடு அதி­க­ரிப்பு ... மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் சாதகங்கள் மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் சாதகங்கள் ...
வரு­கி­றது பண்­டிகை காலம் :நுகர்வோர் சாதன நிறு­வ­னங்கள் சுறு­சு­றுப்பு:புதிய மாடல்­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2016
01:04

புது­டில்லி:கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக மந்­த­மாக இருந்த நுகர்வோர் சாத­னங்கள் விற்­பனை, வரும் பண்­டிகை காலம் முதல் சூடு பிடிக்கும் என, தெரி­கி­றது. இதை­யொட்டி பல நிறு­வ­னங்கள், புதிய மாடல்­களில், நவீன வாஷிங் மிஷின், ரெப்­ரி­ஜ­ரேட்டர், ‘டிவி’ மற்றும் ‘ஏசி’ உள்­ளிட்ட வீட்டு பயன்­பாட்டு சாத­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளன.
கடந்த, 2014ல் பருவ மழை தவ­றி­யது; 2015ல், போதிய அளவு மழை பொழி­யா­தது போன்­ற­வற்றால், விவ­சாய உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது. கிரா­மப்­புற மக்­க­ளி­டையே பணப்­பு­ழக்கம் குறைந்து, அவர்­களின் செல­வ­ழிப்பு வருவாய் குறைந்­தது. இந்­தாண்டு, பருவ மழை துவங்கி, நாடு முழு­வதும் நன்கு பெய்து வரு­கி­றது. வழக்­கத்தை விட, மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என, தேசிய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. இதனால், விவ­சாயப் பொருட்­களின் உற்­பத்தி அதி­க­ரித்து, கிரா­மப்­புற மக்­க­ளிடம் பணப்­பு­ழக்கம் அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இது, கிரா­மப்­பு­றங்­களில் வீட்டு பயன்­பாட்டு சாத­னங்கள் விற்­பனை உயர்­வுக்கு வழி வகுக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஆண்டு, பல முன்­னணி நிறு­வ­னங்­களின், ‘ஏசி’ மற்றும் ‘டிவி’ விற்­பனை சரி­வ­டைந்­தது. இந்­தாண்டு, கிரா­மங்கள் மட்­டு­மின்றி நக­ரங்­க­ளிலும், வீட்டு பயன்­பாட்டு சாத­னங்கள் விற்­பனை எகிறும் என, கணிக்­கப்­பட்டு உள்­ளது. ஏழா­வது ஊதியக் குழு பரிந்­துரை அம­லுக்கு வந்­துள்­ளதால், மத்­திய அரசு ஊழி­யர்கள், ஓய்­வூ­தி­யர்கள் உட்­பட, ஒரு கோடிக்கும் அதி­க­மா­னோ­ருக்கு, முன்­தே­தி­யிட்ட, ஊதிய உயர்வு தொகை கிடைக்கும். கணி­ச­மான இத்­தொ­கையில், மக்கள், விரும்­பிய வீட்டு பயன்­பாட்டு சாத­னங்­களை வாங்­குவர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை­யொட்டி, வீடி­யோகான், வேர்ல்பூல், பி.எஸ்.எச்., ஹோம் அப்­ளை­யன்சஸ், பான­சோனிக் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்கள் போட்டி போட்டுக் கொண்டு, பல வித­மான நுகர்வோர் சாத­னங்­களை சந்­தையில் அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளன.
குன்ஜன் ஸ்ரீவத்­சவா, நிர்­வாக இயக்­குனர், பி.எஸ்.எச்., ஹோம் அப்­ளை­யன்சஸ்: தீபா­வளி, கிறிஸ்­துமஸ் பண்­டி­கை­களை முன்­னிட்டு, புதிய சமை­ய­லறை சாத­னங்கள், ரெப்­ரி­ஜ­ரேட்­டர்கள் ஆகி­ய­வற்­றையும், சிறப்பு நிதி­யு­தவி திட்­டங்­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்த உள்ளோம்.சந்­தி­ர­மணி சிங், தலைமை செயல் அதி­காரி, வீடி­யோகான்: மக்கள், ஆண்டின் முதல் பாதியில், குறைந்த விலையில் தர­மான பொருட்­களை வாங்க விரும்­புவர்.பண்­டிகை காலத்தில், சற்று விலை அதி­க­முள்ள, மேம்­பட்ட தரத்தில் பொருட்­களை வாங்­குவர். அதற்­கேற்ப, ‘பிரீ­மியம், செமி பிரீ­மியம்’ பிரி­வு­களில், வாஷிங் மிஷின், ரெப்­ரி­ஜ­ரேட்டர், எல்.இ.டி., ‘டிவி’ உள்­ளிட்ட சாத­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ராகி வரு­கிறோம்.
கபில் அகர்வால், துணை தலைவர், சந்­தைப்­ப­டுத்­துதல், வேர்ல்புல்: புதிய வாஷிங் மிஷின்­க­ளுடன், தீபா­வ­ளியை முன்­னிட்டு சிறப்பு தள்­ளு­ப­டி­க­ளையும் வழங்க உள்ளோம். விளம்­ப­ரங்­க­ளுக்கு அதிகம் செல­விட முடிவு செய்­துள்ளோம்.கமல் நந்தி, செயல் துணை தலைவர், கோத்ரெஜ் அப்­ளை­யன்சஸ்: மக்­க­ளிடம் வாங்கும் சக்தி அதி­க­ரித்­துள்­ளதால், இந்­தாண்டு, பிரீ­மியம் பொருட்­களின் விற்­பனை அதிகம் இருக்கும் என, எதிர்­பார்க்­கிறோம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)