நிதி மகிழ்ச்­சிக்­கான வழி­காட்டிநிதி மகிழ்ச்­சிக்­கான வழி­காட்டி ... காலாண்டு முடிவுகள் காலாண்டு முடிவுகள் ...
பொரு­ளா­தார வளர்ச்சி நம்­பிக்கை தரும் அம்­சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
07:30

இந்­திய பொரு­ளா­தார வளர்ச்­சியின் மீட்சி மேலும் பர­வ­லான தன்­மை­யுடன் இருப்­ப­தாக சர்­வ­தேச நிதிச்­சே­வைகள் குழு­ம­மான மார்கன் ஸ்டான்லி அறிக்கை தெரி­விக்­கி­றது.
உள்­நாட்டு பொரு­ளா­தாரம் ஒட்டு­மொத்த நோக்கில் கடந்த இரண்டு ஆண்­டு­களில் மேம்­பட்­டி­ருக்­கி­றது என்றும், அரசின் முத­லீடு மற்றும் அந்­நிய நேரடி முத­லீடு ஆகி­ய­வற்றின் கார­ண­மாக ஒட்­டு­மொத்த நோக்­கி­லான நிலை மற்றும் வளர்ச்­சியில் சீரான முன்­னேற்றம் ஏற்­பட்டு வரு­வ­தாக சர்­வ­தேச நிதிச்­சே­வைகள் குழு­ம­மான மார்கன் ஸ்டான்லி தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக மார்கன் ஸ்டான்லி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மார்ச் வரை முடிந்த காலாண்டில் இந்­திய பொரு­ளா­தார வளர்ச்­சியின் மீட்சி மேலும் பர­வ­லாக இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.
நுகர்வு செல­வுகள் அதி­க­ரித்­தி­ருப்­பதே இந்த மேம்­பாட்­டிற்கு காரணம் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நுகர்வு செல­வுகள் அதி­க­ரித்­தி­ருப்­பது முக்­கிய அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது. ஏனெனில், 2012ம் ஆண்டில் இருந்து இது மிகவும் பல­வீ­ன­மாக இருந்து வந்­துள்ள நிலையில், தற்­போது இது அதி­க­ரித்­தி­ருப்­பது நல்ல அறி­கு­றி­யாகும்.
வளர்ச்சி விகிதம்இந்த தர­வு­களின் அடிப்­ப­டையில், மார்கன் ஸ்டான்­லியின், ‘குளோபல் மேக்ரோ சம்மர் அவுட்லுக்’ அறிக்­கையில், 2016ல் இந்­திய பொரு­ளா­தா­ரத்­திற்­கான வளர்ச்சி கணிப்பு 7.5 சத­வீ­தத்தில் இருந்து 7.7 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்ளது. அதே போல 2017ம் ஆண்­டுக்­கான வளர்ச்சி கணிப்பு 7.7 சத­வி­தத்தில் இருந்து 7.8 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.ஜி.டி.பி., எனப்­படும் உள்­நாட்டு மொத்த உற்­பத்தி புள்­ளி­வி­ப­ரங்கள் மற்றும் பரவ­லாக நம்­பிக்கை அளிக்கும் ஒட்­டு­மொத்த சூழல் ஆகி­யவை இதற்கு அடிப்­ப­டை­யாக அமைந்­து உள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
பிரெக்ஸிட் பாதிப்புஇந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பான நம்­பிக்கை அளிக்கும் அம்­சங்­களின் அடிப்­ப­டையில் வளர்ச்­சிக்­கான கணிப்பு உயர்த்­தப்­பட்­டுள்ள நிலையில், பிரெக்ஸிட் பிரச்னை தாக்கம் செலுத்­தலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரிட்டன் வெளி­யேறும் முடிவு பிரெக்ஸிட் என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இதன் தாக்கம் உல­க­ளவில் இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால் சர்­வ­தேச பொரு­ளா­தா­ரத்தில் தேக்க நிலை ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு முன்­ன­தாக 30 சத­வீ­த­மாக இருந்­ததில் இருந்து 40 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­லையில், இந்­தி­யா­விலும் வர்த்­தகம் மற்றும் நிதி பிரி­வு­களில் பாதிப்பு இருக்கும் என்­றாலும், இது மற்ற நாடு­களின் பாதிப்பை ஒப்­பிடும் போது குறை­வா­கவே இருக்கும். பிரிட்­ட­னுக்­கான இந்­தி­யாவின் ஏற்­று­மதி குறை­வா­கவே உள்­ளது.
மேலும் ஒட்­டு­மொத்­த­மான நிலை­மையின் ஸ்திரத்­தன்மை இந்த பாதிப்பை குறைக்கும். உள்­கட்­ட­மைப்பு உள்­ளிட்ட துறை­களில் அரசின் முத­லீடு மற்றும் அந்நிய நேரடி முத­லீடு கார­ண­மாக பொரு­ளா­தார வளர்ச்­சியில் மீட்சி ஏற்­பட்­டுள்­ளது. இவற்­றோடு நுகர்வும் மேம்­படத் துவங்­கி­யி­ருக்­கி­றது.மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் சந்­தையின் வரு­வாயில் பர­வ­லான வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. சில்­லரை கடன் வளர்ச்சி, பெட்ரோல் நுகர்வு, நுகர்­பொருள் உற்­பத்தி ஆகி­ய­வற்றால் நுகர்வில் மேம்­பாடு ஏற்­பட்டு வரு­கி­றது. அதி­க­ரிக்கும் இரு சக்­கர வாகன உற்­பத்தி, கிரா­மப்­புற நுகர்வு மேம்­பட்டு வரு­வதை உணர்த்­து­கி­றது.
உருக்கு மற்றும் சிமென்ட் ஆகி­ய­வற்றின் தேவையும் அதி­க­ரித்து நகர்­பு­றங்­களில் வீடு­களின் விற்­ப­னையும் உயர்ந்­துள்­ளது.எனினும், மற்ற நாடு­களின் சந்­தையில் தேவை மந்­த­மா­வது மற்றும் தனியார் முத­லீட்டில் சுணக்கம் ஆகி­யவை வளர்ச்­சிக்­கான தடை­க­ளாக இருக்கும் என கரு­தப்­ப­டுகி­றது. மொத்த முத­லீட்டில் 22 சதவீ­த­மாக அமையும் தனியார் துறை முத­லீடு கடந்த 4 ஆண்­டு­களில் பல­வீ­ன­மா­கவே இருந்து வரு­கி­றது. தனியார் முத­லீடு மேம்­ப­டாமல் இருக்கும் நிலைக்கு, வெளிச்­சந்­தையின் மந்த நிலை, நிறு­வ­னங்­களின் விலை ஆற்றல் குறைவு, வங்­கித்­து­றையின் பல­வீ­ன­மான பாலன்ஸ் ஷீட் ஆகி­யவை கார­ண­மாக அமைந்­துள்­ளன.
வட்டி குறைப்புஇந்த மேம்­பட்ட சூழல் உற்­பத்தி அதி­க­ரிக்க மற்றும் பண­வீக்கம் குறைய வழி­வ­குக்­கலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­படு­கி­றது. 2017 மார்ச் காலாண்டில் பண­வீக்கம் 4.5 சத­வீ­த­மாக குறைய வாய்ப்பு இருக்­கி­றது. பண­வீக்­கத்­திற்கு வித்­திடும் அம்­சங்கள் கட்­டுக்குள் உள்­ளன. இவற்றின் கார­ண­மாக ரிசர்வ் வங்கி, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் வட்டி குறைப்பை அறி­விக்கும் வாய்ப்பு உள்ள­தா­கவும் எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது. ரிசர்வ் வங்­கியின் வட்டி குறைப்பு மேலும் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)