பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:36

புதுடில்லி : ‘மத்திய அரசு, யூரியா சாரா உரங்களின் அதிகபட்ச சில்லரை விலையை குறைத்துள்ளதால், பொது துறையைச் சேர்ந்த உர நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம், 3,000 கோடி ரூபாய் வரை குறையும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் ரிசர்ச் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில், உரம் தயாரிப்பிற்கான மூலப் பொருட்கள் விலை குறைந்ததை அடுத்து, மத்திய அரசு, யூரியா சாரா உரங்களின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை குறைத்து நிர்ணயித்துள்ளது.
தனியார் துறைஇதன்படி, டி.ஏ.பி., உரம், டன்னுக்கு, 2,500ரூபாய் குறைக்கப்பட்டு, 22 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எம்.ஓ.பி., உரம், டன்னுக்கு, 5,000 ரூபாய் குறைந்து, 11 ஆயிரம் ரூபாயாக உள்ளது. என்.பி.கே., கலப்பு உரம் விலை, டன்னுக்கு, 1,000 ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது.இந்த விலை குறைப்பை, பொது துறையைச் சேர்ந்த, ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ், நேஷனல் பெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
தனியார் துறையைச் சேர்ந்த, இந்தியன் பொட்டாஷ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களும், யூரியா சாரா உரங்களின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.இதன் மூலம், யூரியா சாரா உரங்களின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, 5 – 31 சதவீதம் வரை குறையும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, 4,500 கோடி ரூபாய் உரச் செலவு மிச்சமாகும்.அதேசமயம், மத்திய அரசின் நடவடிக்கையால், பொது துறை உர நிறுவனங்கள், அவற்றின் செயல்பாட்டு லாப வரம்பில், 3,000 கோடி ரூபாயை இழக்க நேரிடும்.
மத்திய அரசுஉரம் தயாரிப்பில், மூலப் பொருட்களின் செலவினம், 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த மார்ச் முதல், உரம் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களின் விலை, 5 – 7 சதவீதம் என்ற அளவிற்கே குறைந்துள்ளது.ஆனால், மத்திய அரசு, யூரியா சாரா உரங்களின் விற்பனை விலையை, 5 – 31 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதனால், பொது துறை நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு பாதிக்கும்.அதேசமயம், ‘மூலப் பொருட்கள் விலை மேலும் குறைந்து, உரங்களுக்கான தேவை அதிகரித்தால், பாதிப்பு குறைவாக இருக்கும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
உர மானியம்மத்திய அரசு, நடப்பு 2016–17ம் நிதியாண்டில், ஊட்டச்சத்து அடிப்படையிலான உரங்களுக்கு, ரூ. 21,274 கோடி மானியம் வழங்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|