பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
12:43

ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரிப்பால், சாத்துக்குடி விலை சரிந்துள்ளது. ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகம். இங்கு விளையும் சாத்துக்குடி, நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதோடு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. சில மாதங்களாக, ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் குறைந்து இருந்தது. ரம்ஜான் நோன்பு, கோடை வெயில் காரணமாக தேவையும் அதிகரித்தது. தற்போது, ரம்ஜான் முடிந்து, கோடை தாக்கம் குறைந்து, தென் மேற்கு பருவ மழை துவங்கி உள்ளது. தமிழகத்திற்கு வரத்து அதிகரித்து வருவதால், சாத்துக்குடி விலை வீழ்ச்சி அடைய துவங்கி உள்ளது. ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற சாத்துக்குடி, ஒரு கிலோ, 20 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செப்டம்பர் முதல் சாத்துக்குடி வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், விலை மேலும் குறையும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|