பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
13:28

பழநி: 'கொத்தமல்லி' தளை மூன்று மடங்கு வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரை விற்கப்படுகிறது. பழநி ஆயக்குடி, அமரப்பூண்டி, வி.கே.என்.புதுார், வத்தகவுண்டன்வலசு, பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 'கொத்தமல்லி' தளை சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை விவசாயிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், பழநி உழவர்சந்தைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது சாரல் மழை பெய்வதால் 'கொத்தமல்லி' விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு மூன்று மடங்கு வரத்துள்ளது. ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.10 முதல் ரூ.14 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.
உழவர்சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ கடந்த மாதம் வரத்து இல்லாமல் தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ வரை கொத்தமல்லி சந்தைக்கு வந்தது, அப்போது ஒருகிலோ ரூ.120 வரை விற்றது. தற்போது தினமும் 600 கிலோ வரை கொத்தமல்லி விற்பனை வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது,” என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|