பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
15:30

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முள்ளங்கி 6 எக்டேரிலும், வெண்டைக்காய் 60 எக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் வெண்டைக்காய் 500 கிலோவும், சீசன் காலத்தில் முள்ளங்கி 300 கிலோ வரைக்கும் விற்பனைக்கு வரும்.கடந்த மாதம் வரத்து குறைவால் வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 விற்றது. முள்ளங்கி கிலோ ரூ.36 க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய், சீசன் என்பதால் முள்ளங்கி விலையும் சரிவடைந்து வருகிறது. நேற்றும் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.14 க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ.14 க்கும் விற்றது. வெண்டைக்காய், முள்ளங்கி விலை குறைவால் மக்கள் அதிகம் வாங்கி சென்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|