பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
16:11

மும்பை : நிப்டியும், நிப்டி வங்கியும் 52 வாரங்களுக்கு பிறகு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிப்டி 94.45 புள்ளிகள் உயர்ந்து 8635.65 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 292.10 புள்ளிகள் உயர்ந்து 28,095.34 புள்ளிகளாகவும் உள்ளது. 74 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீட்டின் மூலம் மே இறுதி வரை ரூ.2237 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு இன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பின் காரணமாக காலையில் சரிவுடன் வர்த்தகத்தை துவங்கிய பங்குச்சந்தைகளிலல்உயர்வு ஏற்பட்டது. பிற்பகல் வர்த்தகத்தின் போது முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்ததை அடுத்து பங்குச்சந்தைகள் உயர துவங்கின. மாருதி சுசுகி நிறுவனத்தின் வருவாய் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கான காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|