பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:11

புதுடில்லி : மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் கூறியதாவது: மத்திய அரசு, 1942ம் ஆண்டு இயற்றப்பட்ட காபி சட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. காபி வாரியம், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அவற்றுக்கு எந்த விதத்திலும் தொடர்பற்றதாக, 70 ஆண்டுகள் பழமையான காபி சட்டம் உள்ளது. அதனால், அந்த சட்டத்தை திரும்பப் பெற்று, இந்தாண்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய காபி வர்த்தகம் சார்ந்ததாக, இச்சட்டம் இருக்கும். பருவம் தவறிய மழையால், நடப்பு நிதியாண்டில், காபி உற்பத்தி, 8 சதவீதம் சரிவடையும் என, தெரிகிறது. சர்வதேச அளவில், காபி பயிர் பரப்பில், இந்தியாவின் பங்கு, 2 சதவீதம்; உற்பத்தி, 4 சதவீதம்; ஏற்றுமதி 5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் உள்ள பன்னாட்டு காபி நிறுவனங்களை, உள்நாட்டு காபியை பயன்படுத்த வேண்டும் என, நிபந்தனை விதிக்கும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|