பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:15
புதுடில்லி : இணையதள விற்பனை மூலம், ஹிமாலயா நிறுவனம், 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
ஹிமாலயா நிறுவனம், ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் தனிநபர் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், இணையதளங்கள் மூலமாகவும், கடைகள் மூலமாகவும், தன் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்த நிலையில், இணையதள விற்பனையின் மூலம், 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட, ஹிமாலயா முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, ஹிமாலயா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு முதல், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ ஆகிய நிறுவனங்களின் இணையதளங்கள் மூலம், எங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இணையதளம் வாயிலான விற்பனை, ஆண்டுக்கு, 70 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் மூலம், 2018ல், 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|