பதிவு செய்த நாள்
26 ஜூலை2016
07:16

புதுடில்லி : பி.என்.பி., ஹவுசிங் நிறுவனம், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது.
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், வீட்டுக் கடன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது, விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்து உள்ளது. இதற்கு தேவையான நிதியை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டி கொள்ள திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும், 28 நகரங்களில், 48 கிளைகள் உள்ளன. தற்போது, விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இதற்காக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களில், கூடுதலாக, 60 கிளைகள் துவக்கப்பட இருக்கின்றன. பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளிலும், புதிதாக கிளைகள் துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|