மத்திய அரசின் நிதியால் ஐ.ஓ.பி., – சி.பி.ஐ.,க்கு பயன்மத்திய அரசின் நிதியால் ஐ.ஓ.பி., – சி.பி.ஐ.,க்கு பயன் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.42 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.42 ...
அமெ­ரிக்­காவில் அதி­ரடி ; ரூ.32,361 கோடிக்கு ‘யாகூ’ விற்­பனை; ‘வெரிசான்’ நிறு­வனம் வாங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2016
07:22

நியூயார்க் : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ‘யாகூ’ வலை­தள நிறு­வ­னத்தை, தொலைத்­தொ­டர்பு துறையைச் சேர்ந்த, வெரிசான் கம்­யூ­னி­கேஷன்ஸ் நிறு­வனம், 32 ஆயி­ரத்து, 361 கோடி ரூபாய்க்கு (483 கோடி டாலர்) கைய­கப்­ப­டுத்­து­கி­றது.
இது தொடர்­பாக, பல மாதங்­க­ளாக, இரு நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே ரக­சிய பேச்சு நடை­பெற்று வந்­தது. இந்­நி­லையில், நேற்று, யாகூ நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்த உள்­ள­தாக, வெரிசான் கம்­யூ­னி­கேஷன்ஸ் அதி­கா­ர­ பூர்­வ­மாக அறி­வித்­தது. யாகூ நிறு­வ­னத்தின் பங்­கு­தா­ரர்கள் ஒப்­பு­த­லுக்கு பின், 2017, மார்ச் மாதத்­திற்குள், யாகூ, வெரிசான் நிறு­வ­னத்தின் ஓர் அங்­க­மாக மாறும். அமெ­ரிக்­காவின் ஸ்டான்­போர்டு பல்­க­லைக்­க­ழக பொறி­யியல் மாண­வர்­க­ளான, ஜெரி யங், டேவிட் பிலோ ஆகியோர் இணைந்து, 1994ல், யாகூ நிறு­வ­னத்தை உரு­வாக்­கினர்.
இணை­யத்தில், வலை­தள நிறு­வ­னங்­களின் முக­வ­ரி­களை தேடித் தரும் முன்­னோடி தேடல் பொறி என்ற சிறப்பு, யாகூ வலை­த­ளத்­திற்கு உள்­ளது. பின்­னாளில், பொழு­து­போக்கு, செய்­திகள், விளை­யாட்டு என, ஏரா­ள­மான வச­தி­க­ளுடன், கிடு­கி­டு­வென யாகூ வளர்ந்­தது.துவக்­கத்தில், ‘கூகுள்’ தேடல் பொறி வச­தி­களை பயன்­ப­டுத்தி வந்த யாகூ, அந்­நி­று­வ­னத்தை கைய­கப்­ப­டுத்த விரும்­பி­யது. ஆனால், கூகுள் அதை ஏற்­காமல், 1998ல், தனியே வலை­தள தேடல் பொறி­யாக செயல்­படத் துவங்­கி­யது. கூகுள், கூடுதல் வச­தி­க­ளுடன் உல­க­ளவில் விறு­வி­று­வென நெட்­டி­சன்­களை வசீ­க­ரித்துக் கொண்­டது. இதனால், போட்­டியை சமா­ளிக்க முடி­யாமல் யாகூ திண­றி­யது. இந்­நி­லையில், சமூக வலை­த­ள­மான, ‘பேஸ்புக்’ நிறு­வ­னமும், யாகூ­விற்கு பலத்த போட்­டியை ஏற்­ப­டுத்­தி­யது.
இதனால், தடு­மா­றிய யாகூ நிறு­வ­னத்தை, சில ஆண்­டு­க­ளுக்கு முன், ‘மைக்­ரோசாப்ட்’ கைய­கப்­ப­டுத்த முன்­வந்­தது. ஆனால், அதை ஏற்­காத யாகூ, தற்­போது, வெரிசான் வழங்க முன் வந்த தொகையை ஏற்­றுக்­கொண்­டுஉள்­ளது. அமெ­ரிக்­காவில் தொலைத்­தொ­டர்பு சேவையில் முத­லி­டத்தில் உள்ள, வெரிசான் கம்­யூ­னி­கேஷன்ஸ், பல்­வேறு நாடு­களில் இணைய சேவையை வழங்கி வரு­கி­றது. யாகூவை கைய­கப்­ப­டுத்­து­வதன் மூலம், இணையம் சார்ந்த வர்த்­தக செயல்­பா­டு­க­ளிலும், உல­க­ளவில் தனித்­துவம் பெற, வெரிசான் திட்­ட­மிட்­டுள்­ளது.

* உல­க­ளவில் மிக மதிப்­புள்ள வலை­தள நிறு­வ­னங்­களில் யாகூ, நான்­கா­வது இடத்தில் உள்­ளது* யாகூ வலை­த­ளத்தை, பிரதி மாதம், 70 கோடி பேர் பார்­வை­ இ­டு­கின்­றனர்* 30க்கும் மேற்­பட்ட மொழி­களில் சேவை வழங்கி வரு­கி­றது * வலை­தளம் வாயி­லாக மாதம், 50 கோடிக்கும் அதி­க­மானோர், பொருட்­களை வாங்­கு­கின்­றனர்* யாகூ நிறு­வ­னத்தில், 16 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் பணி­யாற்­று­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 26,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)