பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
04:26
புதுடில்லி:வலைதள வணிக நிறுவனமான அமேசான், இந்தியாவில் பிரைம் வீடியோ எனும் சேவையை வழங்க திட்டமிடுகிறது.அண்மையில் அமேசான் இந்தியா நிறுவனம், பிரைம் சேவை எனும் வசதியை அறிமுகம் செய்தது. இந்த சேவையின் மூலமாக வாடிக்கையாளர்கள், இலவச டெலிவரி வசதிகள் உள்ளிட்ட, பல்வேறு பயன்களை பெற முடியும். பிரைம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ், தன் கருத்துக்களை தெரிவித்த போது, விரைவில் பிரைம் வீடியோ சேவையும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:உறுப்பினர்களுக்கான பிரைம் சேவை வசதியோடு, அடுத்து பிரைம் வீடியோ வசதியையும் வழங்க இருக்கிறோம். விரைவில், இந்த சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலமாக ஒரிஜினல் படங்கள் மற்றும் தொடர்களை கண்டு களிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|