பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
04:32

புதுடில்லி:சமூக வலைதளங்களான, பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் மொத்த விளம்பர வருவாயில், 80 சதவீதம், மொபைல் போன் விளம்பரம் மூலம் கிடைக்கிறது. கடந்த ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர வருவாய், 63 சதவீதம் அதிகரித்து, 620 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில், 84 சதவீதம், அதாவது, 520 கோடி டாலர், மொபைல் போன் விளம்பரம் மூலம் கிடைத்து உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், 97 சதவீதம், விளம்பரம் மூலமும், 3 சதவீதம், கட்டணம் உள்ளிட்ட பிற வழிகளிலும் கிடைக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருவாய், 59 சதவீதம் உயர்ந்து, 642.60 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பேஸ்புக் வலைதளத்தை, 170 கோடி பேர், பயன்படுத்துகின்றனர். மதிப்பீட்டு காலாண்டில் டுவிட்டரின் விளம்பர வருவாய், 18 சதவீதம் உயர்ந்து, 53.50 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. இதில், 89 சதவீதம், அதாவது, 47.61 கோடி டாலர், மொபைல்போன் விளம்பரம் மூலம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டின், இதே காலாண்டில், இந்நிறுவனத்தின் விளம்பர வருவாய், 45.20 கோடி டாலராக இருந்தது. டுவிட்டரின் மொத்த வருவாய், 20 சதவீதம் அதிகரித்து, 60.20 கோடி டாலராக உயர்ந்துள்ளது. டுவிட்டர் வலைதளத்தை, 31.30 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|