வணிக முத்­திரை நடை­முறை ‘டிஜிட்டல்’ மய­மா­னதுவணிக முத்­திரை நடை­முறை ‘டிஜிட்டல்’ மய­மா­னது ... மின்­னணு வடிவில் கிசான் விகாஸ் பத்­திரம் மின்­னணு வடிவில் கிசான் விகாஸ் பத்­திரம் ...
கவ­னச்­சி­த­றலை வெல்லும் வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2016
23:45

வாழ்க்­கையில் கவ­னத்தை அதி­க­ரித்து, கவனச்­சி­த­றலை குறைத்து, நாம் யார் என்­பதை அறி­வ­திலும், நம்­மு­டைய திற­மை­களை சிறப்­பாக பயன்­ப­டுத்திக் கொள்­ளவும் வழி காட்­டு­கி­றது, பீட்டர் பிரெக்­மனின், ‘18 மினிட்ஸ்’ புத்­தகம்: நம்மில் பலர் அள­வுக்கு அதி­க­மான செயல்­களை வைத்­துக்­கொண்டு, அவற்றை ஏன் செய்­கிறோம் என ஒரு நிமிடம் கூட யோசிக்­கா­மலேயே செயல்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறோம்.
ஒரு நிமிடம்: முதலில் ஒரு நிமிடம் எல்­லா­வற்­றையும் நிறுத்­தி­விட்டு அமை­தி­யாக இருங்கள். எதையும் செய்­வ­தற்கு முன் அதன் பலனை நினைத்துப் பார்த்து உங்கள் புரி­தலை விரிவாக்கி கொள்­ளவும். இதன் மூலம் தவ­ற­விட்டு வரும் வாய்ப்­பு­களை கண்­ட­றி­யலாம். செல்ல விரும்­பாத இடத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்­டி­ருப்­பதை அனு­ம­திக்­கா­தீர்கள். உங்­களை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக் கொள்­ளுங்கள். வேலை­யுடன் மட்டும் உங்­களை தொடர்புபடுத்­திப் ­பார்ப்­பதை கைவி­டவும். அதை கடந்தும் உங்கள் அடை­யாளம் இருக்­கி­றது.
மூன்று கேள்­விகள்: நம்­மு­டைய எல்லா தேர்வு­க­ளுக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு விலை உண்டு. எது சரி­யான தேர்வு என அறிய வேண்டும். 1. இந்த ஆண்டின் அர்த்தம் என்ன? 2. இந்த நாளின் அர்த்தம் என்ன? 3. இந்த நொடியின் அர்த்தம் என்ன? எது முக்­கியம் என்­பதை அறி­வ­தற்கு நீண்ட கால மற்றும் இடைப்­பட்ட காலத்தில் நாம் அடைய விரும்­பு­வது என்ன என்­பதை அறிந்து கொள்­வ­தாகும். ஐந்து ஆண்­டு­க­ளுக்கு பிறகு நாம் எப்­படி இருக்க விரும்­பு­கிறோம் என கேட்டு பதில் தேட வேண்டும். இந்த கண்­ணோட்­டத்தில் பார்த்தால் அன்­றாடம் செய்து கொண்­டி­ருக்கும் பல செயல்கள் நம் வாழ்க்­கையில் எந்த தாக்­கமும் செலுத்­த­ாததாக அமைந்­தி­ருக்கும்.
இது, இன்­றைய நாள் மீது கவ­னத்தை கொண்டு வரும். வாழ்க்­கையில் நமக்கு தேவை­யான பெரிய விஷ­யங்கள் என்ன என்­பது பற்றி தெளிவு ஏற்­பட்டு விட்டால், தினமும் செய்யும் விஷ­யங்­களை அதற்­கேற்ப மாற்றி அமைத்துக் கொள்­ளலாம். செய்­யக்­கூ­டி­யவை, செய்­யக்­கூடா­தவை ஆகி­ய­வற்றின் பட்­டியல் நம் முன் இருக்கும். நீண்ட கால நோக்கில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விஷ­யங்­களால் நம்மை சுழலச்­செய்து கொள்ள வேண்டும்.
முன்­னு­ரிமை: நமக்குள் இருக்கும் காம்­ப­ளக்சை மாற்றி அமைத்து, இலக்­கிற்கு தேவை­யா­ன­வற்­றுக்கு முன்­னு­ரிமை அளிக்கச் செய்­வதன் மூலம் அர்த்­த­முள்­ள­வற்றை செய்­யலாம். வெற்­றியை நோக்கி முன்­னேற தடை­யாக இருப்­பது குகை பார்வை, தோல்வி பற்­றிய அச்சம் மற்றும் அவசரப்­பட்டு முடி­வெ­டுப்­பது ஆகி­யவை ஆகும்.ஒவ்­வொரு நாளின் முடி­விலும் அன்­றைய தினம் செய்­வ­தற்றை ஆய்வு செய்­யுங்கள். உங்கள் கவனம், இலக்கு மற்றும் எண்­ணங்­க­ளுக்கு ஏற்ப செயல்கள் இருந்­த­னவா என கேட்­டுக்­கொள்­ளுங்கள். இன்று என்ன கற்­றுக்­கொண்டோம் என யோசி­யுங்கள். நாளை மாற்றம் செய்ய வேண்­டுமா? என யோசித்துப் பாருங்கள்.
உங்கள் இலக்கை நோக்கி முன்­னேற தேவை­யான செயல்­களில் கவனம் செலுத்­து­வது முக்­கியம். அதே நேரத்தில் இலக்­கிற்கு உத­வாத செயல்­களை தவிர்ப்­பதும் முக்­கியம். வேண்டாம் என சொல்லி மறுக்க கற்­றுக்­கொள்­வது கவ­னச்­சித­றலை வெல்­வ­தற்­கான எளிய வழி­யாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)