பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
23:49

இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களில் பெரும்பாலானோர் நிதி எதிர்காலத்திற்கு போதுமான அளவு தயாராக இல்லை என தெரிய வந்துள்ளது. நிதிச்சேவை தகவல் இணைய தளமான பிக்டிசிஷன்ஸ்.காம், தனது தளத்தில் உள்ள வருமான வரி கணக்கிடும் வசதியை பயன்படுத்துபவர் மத்தியில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 9 மாத காலத்தில் 46,000 பேர்களுக்கு மேல் இதில் பங்கேற்றனர். இந்த ஆய்வின் அடிப்படையில் நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள் தங்கள் நிதி எதிர்காலத்திற்கு போதுமான அளவு தயாராக இல்லை என்றும், வரி விதிப்பு தொடர்பான பாதகமான சட்டங்கள் அவர்கள் சேமிப்பின் அளவை பாதிக்கும் வகையில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்ற மக்களில் 90 சதவீதம் பேர், வருமான வரி விலக்கு கோருவதற்கான வருமான வரிச்சட்டத்தின் 80வது சி பிரிவை போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ள முடியாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பி.எப்., ஆயுள் காப்பீடு, வீட்டுக்கடன் விலக்கு உள்ளிட்டவை தொடர்பான விலக்கு பெறுவது 80 சி பிரிவின் கீழ் வருவதால், இந்த பிரிவை பலரால் சிறப்பாக பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|