பதிவு செய்த நாள்
01 ஆக2016
02:19
தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் மொபைல் செயலி உள்ளிட்ட புதிய அம்சங்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மொபைல் செயலி மூலம் உறுப்பினர்கள் பல்வேறு வசதிகளை பெற முடியும்.என்.பி.எஸ்., மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். NPS by NSDL eGov’ எனும் பெயரில் இது அமைந்திருக்கும். இந்த செயலியை நிறுவியவுடன் கணக்கு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் எண்ணே பாஸ்வேர்டாக அமையும்.இந்த செயலி மூலம், முந்தைய ஆண்டுக்கான கணக்கு விபரங்கள் மற்றும் என்.பி.எஸ்., கணக்கு வகை விபரத்தை கோரி பெற முடியும். உறுப்பினரின் பதிவு செய்த இ–மெயில் முகவரியில் இந்த தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேலும், லாகின் செய்து செயலிக்குள் நுழைந்த பிறகு கடைசியாக மேற்கொண்ட ஐந்து பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.இந்த செயலி மூலம், ஆதார் அடிப்படையிலான அடையாளத்தை பயன்படுத்தி தங்கள் தொடர்பு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றையும் உறுப்பினர்கள் மாற்றிக்கொள்ளலாம். பாஸ்வேர்டு மற்றும் ரகசிய கேள்வியை மாற்றிக்கொள்ளலாம். உறுப்பினர்கள் தங்கள் திட்டத்திலும் மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு முறை பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். இதனை கொண்டு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|