பன்­முக வங்கி: கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு ‘செக்’பன்­முக வங்கி: கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு ‘செக்’ ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.71 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.71 ...
மந்­த­நிலை மாறி­யது! மீண்டும் சூடு பிடித்­தது கார் விற்­பனை ; தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் உற்­சாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
23:39

புது­டில்லி : மந்­த­நி­லையில் இருந்த இந்­திய கார் சந்தை, கடந்த சில மாதங்­க­ளாக, மெல்ல எழுச்சி பெற்று வரு­கி­றது. கடந்த ஜூலை மாதம், பெரும்­பான்­மை­யான முன்­னணி கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் விற்­பனை, 10 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
மாருதி சுசூகி இந்­தியா நிறு­வனம், கார் விற்­ப­னையில் முத­லி­டத்தில் உள்­ளது. இந்­நி­று­வனம், கடந்த ஜூலையில், 1 லட்­சத்து, 25,778 கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் விற்­ப­னை­யான, 1 லட்­சத்து, 10,405 கார்­களை விட, 13.9 சத­வீதம் அதிகம். இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் புதிய, ‘விட்­டாரா பிரெஸ்ஸா, எர்­டிகா, எஸ் – கிராஸ்’ ஆகிய கார்­களின் விற்­பனை, இரண்டு மடங்கு அதி­க­ரித்து, 6,916லிருந்து, 17,382 ஆக உயர்ந்­துள்­ளது. எனினும், ‘ஆல்டோ, வேகன்ஆர்’ உள்­ளிட்ட சிறிய கார்கள் விற்­பனை, 7.2 சத­வீதம் சரி­வ­டைந்து, 7,752லிருந்து, 35,051ஆக குறைந்­துள்­ளது.
அதிகரிப்பு...அதே­ச­மயம், ‘ஸ்விப்ட், ரிட்ஸ், எஸ்­டிலோ, டிசையர், பலேனோ’ ஆகிய கார்கள் விற்­பனை, 4.1 சத­வீதம் அதி­க­ரித்து, 48,381லிருந்து, 50,362 ஆக உயர்ந்­துள்­ளது. இதே காலத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்­தியா நிறு­வ­னத்தின் கார் விற்­பனை, 12.87 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 36,503லிருந்து, 41,201ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வ­னத்தின் கார் விற்­பனை, 14 சத­வீதம் அதி­க­ரித்து, 31,087லிருந்து, 35,305ஆக உயர்ந்­துள்­ளது. போர்டு இந்­தி­யாவின் கார் விற்­பனை, 62.21 சத­வீதம் உயர்ந்து, 4,362லிருந்து, 7,076 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மகிழ்ச்சி : ரெனோ இந்­தி­யாவின் கார் விற்­பனை, ஏழு மடங்கு உயர்ந்து, 1,686லிருந்து, 11,968 என்ற அளவை எட்­டி­யுள்­ளது. டாடா மோட்டார்ஸ் நிறு­வ­னத்தின் கார் விற்­பனை, 43.29 சத­வீதம் அதி­க­ரித்து, 8,520லிருந்து, 12,209 ஆக உயர்ந்­துள்­ளது. டொயோட்டா கிர்­லோஸ்கர் நிறு­வ­னத்தின் விற்­பனை, 2.76 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 12,070லிருந்து, 12,404ஆக உயர்ந்­துள்­ளது.கார் விற்­பனை கிடு­கி­டு­வென உயர்ந்து வரு­வது, தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை மகிழ்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.
ஹூண்டாய் நிறு­வ­னத்தின், ‘கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, கிரெட்டா’ ஆகிய மாடல்கள், சிறப்­பான விற்­பனை வளர்ச்­சிக்கு துணை புரிந்து வரு­கின்­றன. பரு­வ­மழை நன்கு இருக்கும் என்ற எதிர்­பார்ப்பு, பண­வீக்கம் கட்­டுக்குள் இருப்­பது, குறைந்த வட்டி விகிதம், எரி­பொருள் விலை வீழ்ச்சி உள்­ளிட்ட அம்­சங்கள், நுகர்­வோ­ரிடம் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இதன் கார­ண­மாக, கார் வாங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது.– ராகேஷ் ஸ்ரீவத்­சவா, துணை தலைவர் , விற்­பனை – சந்­தைப்­ப­டுத்­துதல், ஹூண்டாய் மோட்டார் இந்­தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)