பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:21

கோல்கட்டா : பெர்ஜெர் பெயின்ட்ஸ், 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்து உள்ளது. பெர்ஜெர் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு, மஹாராஷ்டிர மாநிலம், பூனாவுக்கு அருகில் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு, 12 ஆயிரம் டன் பெயின்ட் தயாரிக்கும் திறன் உடையது. இந்த நிலையில், பெர்ஜெர் நிறுவனம், அடுத்த நிதியாண்டில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், ஆலையின் திறனை உயர்த்த முடிவு செய்து உள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், அசாம் மாநிலம், தேஸ்பூர் என்ற இடத்தில், தொழிற்சாலை அமைத்து வருகிறது. இந்த ஆலையில், 2017 ஜன., மாதம் உற்பத்தி துவங்கும். அடுத்த நிதியாண்டில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், புனேவில் உள்ள ஆலையின் திறனை, 22 ஆயிரம் டன்னாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், கூடுதலாக வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|