பதிவு செய்த நாள்
05 ஆக2016
10:08

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஆகஸ்ட் 05) இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வுடனும், நிப்டி 8600 புள்ளிகளை கடந்தும் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( காலை 9 மணி நிலவரம் ) சென்செக்ஸ் 231.03 புள்ளிகள் உயர்ந்து 27,945.40 புள்ளிகளாகவும், நிப்டி 71.75 புள்ளிகள் உயர்ந்து 8622.85 புள்ளிகளாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் ரூபாய் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|