பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:04

சென்னை:‘ஜி.எஸ்.டி., சட்டம் அமலுக்கு வந்தால், தொலைநோக்கு அடிப்படையில், ஆட்டோ மொபைல் துறைக்கு நன்மை அளிக்கும்’ என, ஆட்டோ மொபைல் துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து, ‘ரெனோ இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் ஷானி கூறியுள்ளதாவது:இந்தியாவில், இதுவரை நடைபெற்ற சீர்திருத்தங்களில், ஜி.எஸ்.டி., மசோதா மிகப்பெரியதாகும். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புமுறை, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வரி விதிப்பு முறை எளிதாக இருப்பதால், பல்வேறு துறைகள், குறிப்பாக ஆட்டோ மொபைல் துறைக்கு சாதகமானதாக அமையும். வாகனங்களை, ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு கொண்டு செல்வதற்கான செலவு, 30 முதல், 40 சதவீதம் வரை குறையும். இதன் பலனை, வாடிக்கையாளர்கள் அனுபவிப்பர். இந்தியாவில், வணிகம் செய்வதை எளிதாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில், இது ஒரு மைல்கல். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|