பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:05

மும்பை:பிக்பஜார் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக, பிக்பஜாரை நடத்தி வரும் பியூச்சர் குழுமம், பேடிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தினால், ஆன்லைன் மூலமாக ஆர்டர் கொடுத்தால், வீட்டுக்கு பொருட்கள் வந்து சேர்ந்து விடும். இது குறித்து பியூச்சர் குழுமத்தின், தலைமை செயல்பாட்டு அதிகாரியான, கிஷோர் பியானி கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விற்பனை குறித்து கவனித்து வந்தோம். அதில் ஒரு வாடிக்கையாளரை பெற, 20 சதவீதம், பொருட்களுக்கான கிடங்கு வசதிக்கு, 20 சதவீதம், அன்றாட செயல்பாட்டுக்கான செலவு, 8 முதல் 10 சதவீதம் என, கிட்டத்தட்ட, 50 சதவீதம் செலவு ஆகிவிடுகிறது. செயல்பாட்டு செலவுக்காக, 50 சதவீதம் ஆகுமென்றால் பிறகு எப்படி, இந்த பிரிவில் பொருட்களை விற்க முடியும்?இதன் தொடர்ச்சியாக கூட்டு வைப்பதுதான், சாத்தியமானதாக இருக்கும் என்பதை உணர்ந்து, அதை செயல்படுத்தி இருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|