98 லட்சம் டன் தங்கம்இந்­தி­யாவில் உள்­ளது98 லட்சம் டன் தங்கம்இந்­தி­யாவில் உள்­ளது ... உற்­பத்தி திறனை அதி­க­ரிக்­கி­றதுஏசியன் பெயின்ட்ஸ் நிறு­வனம் உற்­பத்தி திறனை அதி­க­ரிக்­கி­றதுஏசியன் பெயின்ட்ஸ் நிறு­வனம் ...
ஜி.எஸ்.டி.,க்கு வணி­கர்கள் வர­வேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2016
02:09

‘சரக்கு மற்றும் சேவை வரி அம­லுக்கு வரு­வதால், ஒரு முனை வரியை எளி­தாக கட்டி, நிம்­ம­தி­யாக தொழில் செய்­யலாம். வரி ஏய்ப்­புகள் குறையும்; நாட்டின் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்கும்’ என, தொழில் முனைவோர், வணி­கர்கள் தெரி­வித்­துள்­ளனர்.நாட்டில் உற்­பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி­யான, ‘வாட்’ என்ற பல முனை வரி விதிப்­புகள் உள்­ளன. இது, மாநி­லத்­திற்கு மாநிலம் மாறு­ப­டு­வதால், வணி­கர்­க­ளுக்கு சிக்கல் ஏற்­ப­டு­வ­துடன், வரி ஏய்ப்­புக்கும் வழி வகுத்து விடு­கி­றது. இதை கருத்தில் கொண்டு, ஒரு முனை வரி விதிப்­பான, ஜி.எஸ்.டி.,யை, மத்­திய அரசு கொண்டு வந்­துள்­ளது. ராஜ்­ய­ச­பா­விலும், ஒப்­புதல் கிடைத்­து­விட்­டதால், விரைவில் அம­லுக்கு வர உள்­ளது. இதை, தொழில் முனைவோர், வணி­கர்கள் வர­வேற்­றுள்­ளனர்.
தமிழ்­நாடு, புதுச்­சேரி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்­கரன்: பல வித­மான வரி­களை கட்­டு­வதும், அதற்­கான கணக்கு, வழக்­கு­களை பரா­ம­ரிப்­பது பெரும் சிர­ம­மாக இருந்­தது; இனி அந்த நிலை நீங்கும். ஒரு முனை வரி என்­பதால், எளி­தாக வரியை செலுத்தி, நிம்­ம­தி­யாக தொழில் செய்­யலாம். மாநி­லங்­க­ளுக்கு இடையே வரி வேறு­பாடு இருக்­காது.
ஜி.எஸ்.டி., நாட்டின் வளர்ச்­சிக்­கா­னது; அதே நேரத்தில், இந்த வரி விதிப்பு, 15 சத­வீ­தத்­திற்கு மேல் போகாமல் இருப்­பது நல்­லது.சென்னை தொழில் வர்த்­தக சபையின், ‘லாஜிஸ்டிக் கமிட்டி’ முன்னாள் தலைவர் ஜெ.கிருஷ்ணன்: நாட்டின் தொழில் வளர்ச்­சிக்கு மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்கும் வழி­வ­குக்கும் பய­னுள்ள நடை­முறை. இதை விரைந்து செயல்­ப­டுத்த வேண்டும். அதே நேரத்தில், தமி­ழகம் போன்ற நிதி பற்­றாக்­குறை உள்ள மாநி­லங்­க­ளுக்கு, இது மேலும் நிதி சிக்­கலை ஏற்­ப­டுத்தி விடாத வகையில், செயல்­ப­டுத்த வேண்டும்.தமிழ்­நாடு வணிகர் சங்க பேர­மைப்பு தலைவர் விக்­கி­ர­ம­ராஜா: உற்­பத்தி பொரு­ளுக்கு, ஒரு இடத்தில் மட்­டுமே வரி இருக்க வேண்டும்; எல்லா இடங்­க­ளிலும் பின்­தொ­ட­ரக்­கூ­டாது.
ஜி.எஸ்.டி., எனும் ஒரு முனை வரியால், வரி ஏய்ப்பு குறையும்; நாட்டின் வரி வருவாய் அதி­க­மாகும். சட்ட விதி­களை எளி­மைப்­ப­டுத்தி செயல்­ப­டுத்த வேண்டும்; குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருத்தல் கூடாது.
தமிழ்­நாடு உண­வுப்­பொருள் வியா­பா­ரிகள் சங்க மாநில தலைவர் எஸ்.பி.ஜெய­பி­ர­காசம்: ஒரு முனை வரி விதிப்பு வர­வேற்­கத்­தக்­கது. அதே நேரத்தில், தமி­ழ­கத்தில், 589 பொருட்­க­ளுக்கு வரி இல்லை. தற்­போது, 100 பொருட்­க­ளுக்கு மட்­டுமே வரி விலக்கு என்றால் குழப்­ப­மாகும். சிறு வணிகர் பாது­காப்பும் கருத்தில் கொள்ள வேண்டும். பிரத்­யேக கமிட்டி அமைத்து, வணி­கர்­களின் கருத்து கேட்டு, அவர்­களின் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்த வேண்டும்.இவ்­வாறு அவர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)