காலாண்டு முடிவுகள்காலாண்டு முடிவுகள் ... முதலீட்டை ஈர்க்க வர்த்தக மாநாடுகள் முதலீட்டை ஈர்க்க வர்த்தக மாநாடுகள் ...
அம்­மாக்­க­ளுக்­கான நிதி அறி­வுரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
07:12

முத­லீடு தொடர்­பான ஆலோ­ச­னைகள் அளிக்கும் கையே­டு­களும், பத்­தி­ரி­கை­களும் ஆண்­களை தேடி வரும்­போது பெண்கள் மட்டும் ஏன் மளிகை கடை­களில் சிக்­க­ன­மாக இருப்­பது பற்­றியும், வீண் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது பற்­றியும் மட்­டுமே ஆலோ­ச­னை­களை கேட்க நேர்­கி­றது என கேள்வி எழுப்­பு­கிறார் கிம்­பர்லி பால்மர். இதை மையமாக கொண்டு, ‘ஸ்மார்ட் மாம், ரிச் மாம்’ புத்­த­கத்தை அவர் எழு­தி­யி­ருக்­கிறார்:* உண்மை என்­ன­வெனில், பெண்கள் தின­சரி அடிப்­ப­டையில் அதிக அளவு பணத்தை கையாள்­கின்­றனர். தங்கள் மீதும், குடும்பம் மீதும் தாக்கம் செலுத்தும் நிதி முடி­வு­களை மேற்­கொள்­கின்­றனர். பல்­வேறு ஆய்­வுகள் குடும்ப நிதி நிர்­வா­கத்தில் பெண்கள் பங்­கேற்க அதிகம் என்று தெரி­விக்­கின்­றன. பெண்கள் தாங்கள் அறிந்­தி­ருப்­பதை விட அதிக நிதி பொறுப்­பு­களை சுமக்­கின்­றனர். ஆனால், நிதி ஆலோ­சனை உலகம் இதை அங்­கீ­க­ரிக்­காமல் இருக்­கி­றது. இருப்­பினும் நம்மில் பலர் முத­லீட்டு விஷ­யத்தில் சிறந்து விளங்­கு­கிறோம். எனவே, நிதி திறன் மிக்க முத­லீட்­டா­ள­ராக விளங்­கு­வதில் நமக்­குள்ள ஆற்­றலை சந்­தே­கிக்க வேண்டாம்.* அம்­மாக்­களை போல் சேமித்து செலவு செய்­யுங்கள். தள்­ளு­ப­டி­களில் கவனம் செலுத்­துங்கள். ஆனால், சில்­ல­ரை­களை மிச்சம் செய்­வது மட்­டுமே உங்கள் நோக்­க­மாக இருக்க கூடாது. நீண்ட கால நோக்கில் கவனம் செலுத்தி திட்­ட­மி­டு­தலை மேற்­கொள்­வ­திலும் கவனம் செலுத்­துங்கள். * குழந்தை பிறப்­புக்கு பிறகு நீங்கள் களைப்­பாக உண­ரலாம். இதன் கார­ண­மாக நிதி விஷ­யங்­களில் கவனம் செலுத்த முடி­யாமல் போகலாம். இது கவ­லையும் அளிக்­கலாம். ஆனால், தாய்மை பொறுப்பை மகிழ்ச்­சி­யோடு நிறை­வேற்­றி­ய­படி, உங்­க­ளுக்­கான வரு­மான வழி­களை தேடிக்­கொள்­ளுங்கள். * ஏதேனும் ஒரு கட்­டத்தில் நிதி பொறுப்­பு­களை பெண்கள் ஏற்க வேண்டி வரலாம். இதை முத­லி­லேயே பெண்­க­ளாக ஏற்­றுக்­கொள்­வது நல்­லது. செல­வு­களை மேற்­கொள்ளும் அதே நம்­பிக்­கை­யோடு முத­லீட்டு முடி­வு­க­ளையும் பெண்கள் எடுக்க வேண்டும். * உங்கள் வீட்­டிற்கு என்று ஒரு திட்­ட­மிடல் தேவை. உங்கள் முக்­கி­ய­மான ஆவ­ணங்­களை ஓரி­டத்தில் எடுத்து வையுங்கள். வீட்டு பரா­ம­ரிப்பு ஆவ­ணங்­க­ளையும், குறிப்­பாக ஓரி­டத்தில் வைக்­கவும். அவ­சர காலத்தில் என்ன செய்ய வேண்டும் எனும் திட்­டத்தை தெளி­வாக எழுதி வைக்­கவும். * ஸ்மார்ட் அம்­மா­வாக இருப்­பது என்­பது பணத்தை நிர்­வ­கிப்­பது மட்டும் அல்ல. அது நம் குழந்­தைகள் தங்கள் கன­வு­களை நோக்கி எப்­படி முன்­னேற வேண்டும் என வழி­காட்­டு­வ­தா­கவும் இருக்கிறது. ஏனெனில், அவர்கள் நாம் நம் கன­வு­களை பின் தொடரும் விதம் மற்றும் மகிழ்ச்­சிக்கும் பொறுப்­பு­களுக்கும் இடையே தின­சரி முடி­வு­களை மேற்­கொள்ளும் விதத்தை பார்த்தே தங்கள் வழியை வகுத்­துக்­கொள்­கின்­றனர். * நீங்கள் அறிந்­தி­ருந்­தாலும் சரி, இல்­லா­விட்டாலும் சரி, உங்கள் குழந்­தைகள் மட்டும் அல்­லாமல் உங்கள் சமூ­கத்தில் உள்ள இளம் பிள்­ளை­க­ளுக்கு நீங்கள் தான் வழி­காட்டி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)