ஆதார் அட்டை மூலம் பான் கார்டுஆதார் அட்டை மூலம் பான் கார்டு ... வைர அகழ்­வா­ராய்ச்சி செய்ய என்.எம்.டி.சி., நிறு­வ­னத்­துக்கு அனு­மதி வைர அகழ்­வா­ராய்ச்சி செய்ய என்.எம்.டி.சி., நிறு­வ­னத்­துக்கு அனு­மதி ...
சரக்கு மற்றும் சேவை வரி சாத­கங்­களும் சவால்­களும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
07:17

இந்­தியா முழு­வதும் ஒரே வித­மான வரி விதிப்­பிற்கு வழி வகுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியால் பல்­வேறு துறை­களில் ஏற்படக்­கூ­டிய தாக்கம் பற்றி ஒரு பார்வை:

சுதந்­திர இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­படும் மிகப்­பெ­ரிய வரி சீர்­தி­ருத்­த­மாக ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்றும் சேவை வரி அமை­கி­றது. இதற்­கான மசோதா அண்­மையில் மாநி­லங்­க­ள­வையில் நிறை­வே­றிய நிலையில், இதை சட்­ட­மாக்­கு­வ­தற்­கான செயல்­மு­றைகள் துவங்­கி­யுள்­ளன.
ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்­கப்­ப­டு­வது, வரி விகிதம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­வது மற்றும் குறைந்­த­பட்சம் 15 மாநில சட்­ட­ச­பை­களில் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய அவ­சியம் உள்­ளிட்ட செயல்­பா­டுகள் காத்­தி­ருக்­கின்­றன. மேலும், பெரும்­பா­லான வர்த்­தக நிறு­வ­னங்கள் இந்த மாற்­றத்­திற்கு தயார் நிலையில் இல்லை என்றும் கூறப்­ப­டு­கி­றது. சவால்கள் நிறைந்­தி­ருந்­தாலும், சரக்கு மற்றும் சேவை வரி நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பல்­வேறு சாத­க­மான அம்­சங்­களை கொண்­டி­ருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழு­வதும் ஒரே வித­மான வரி விதிப்பை கொண்டு வர உள்ளது.
நோக்கம் :தற்­போது, நாட்டில் நேரடி மற்றும் மறை­முக வரிகள் வசூ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன. மத்­திய அரசால் வசூ­லிக்­கப்­படும் வரு­மான வரி நேரடி வரி என குறிப்­பி­டப்­படு­கி­றது. மறை­முக வரிகள் பொருட்­களின் உற்­பத்தி, நுகர்வு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படு­கின்­றன. இவை மத்­திய மற்றும் மாநில அர­சு­களால் வசூ­லிக்­கப்­பட அர­சியல் சாசனம் வழி செய்­துள்­ளது. பொது­வாக, உற்­பத்தி மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு மத்­திய அரசின் வசம் உள்­ளது. நுகர்வு மீதான வரி மாநில அர­சுகள் வசம் உள்­ளன.ஆனால், இந்த நடை­மு­றையில் உள்ள சிக்கல் என்ன என்றால், ஒரே பொரு­ளுக்கு மீண்டும் மீண்டும் வரி செலுத்தும் சூழல் உள்­ள­தாக அமை­கி­றது. விற்­பனை செய்­யப்­படும் எந்த ஒரு பொருளும் முதலில் உற்­பத்தி செய்யப்­பட வேண்டும். ஆக, உற்­பத்தி வரி விதிக்­கப்­ப­டு­கிறது. பின்னர் சில்­லரை விற்­ப­னைக்கு வரும்­போது மாநில அரசு சார்பில் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இதே பொருள் வேறு மாநி­லத்­திற்கு கொண்டு செல்­லப்­படும் போது, அங்கும் வரி விதிப்­பிற்கு இலக்­கா­கி­றது. இப்­படி பல முனை வரி­வி­திப்­புக்கு உள்­ளாகும் நிலையை மாற்றி ஒரே வரி­விதிப்பை கொண்டு வரு­வது சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்­க­மாக அமை­கி­றது.
முக்­கிய அம்­சங்கள் :நாடு முழு­வதும் பல்­வேறு பொருட்கள் மற்றும் சேவை­க­ளுக்கு பல கட்­டங்­களில் பல்­வேறு வரிகள் செலுத்­தப்­ப­டு­வ­தற்கு மாறாக, ஒரே வரி­யாக சரக்கு மற்றும் சேவை வரி திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. மதிப்பு கூட்டப்­பட்ட வரி, சேவை வரி, உற்­பத்தி வரி மற்றும் பிரத்­யேக வரிகள் உள்­ளிட்ட பல்­வேறு வரிகள் ஒரே சீரான வரி­யாக ஒருங்­கி­ணைக்­கப்­படும். இந்த முறையில் ஏற்­க­னவே செலுத்­தப்­பட்ட வரிக்கு மேல் வரி செலுத்தும் அவ­சியம் இருக்­காது. இது பல­வி­தங்­களில் பய­னுள்­ள­தாக அமையும் என கரு­தப்­ப­டு­கி­றது. தொழில் நிறு­வ­னங்­களை பொருத்­த­வரை, வரி செலுத்தும் நடை­மு­றையை எளி­தாக்கி, சீரான சரக்கு போக்­கு­வ­ரத்­திற்கு வழி வகுக்கும். சாமா­னிய மக்­களை பொருத்­த­வரை, தாங்கள் செலுத்தும் வரி பற்றி தெளி­வாக அறிந்து கொள்ள முடியும். இப்­போ­துள்ள நிலையில், ஒரு பொரு­ளுக்­கான விலையில், எவ்­வ­ளவு வரி செலுத்­தப்­ப­டு­கி­றது என்­பதை பொது மக்கள் தெளி­வாக அறிய முடி­யாமல் இருக்­கி­றது. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரியில் இந்த நிலை மாறும்.
என்ன பலன்?சரக்கு மற்றும் சேவை வரியால் பல்­வேறு துறை­களில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்கம் பற்­றிய கருத்­துக்கள் வெளி­யாகி வரு­கின்­றன. பொது­வாக பார்க்கும் போது, வாக­னங்கள், ஆடைகள், ‘எல்­இடி டிவி’கள் உள்­ளிட்­ட­வற்றின் விலை குறைய வாய்ப்பு இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது. அதே போல ரெஸ்­டா­ரண்ட்­களில் சாப்­பி­டு­வது, போன் சேவை, நகைகள் ஆகி­ய­வற்றின் விலை அதி­க­ரிக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக கார் வாங்கும் போது, 12.5 சத­வீத உற்­பத்தி வரி மற்றும் வாட் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், ஜி.எஸ்.டி.,யில் ஒரே வரி எனும் போது, இதை­விட குறை­வாக இருக்கும். இதே போல, ‘எல்­இடி’ பல்பை உதா­ர­ண­மாக எடுத்­துக்­கொண்டால் அதன் உற்­பத்தி செலவு 50 ரூபா­யாக அமை­கி­றது. அதன் பிறகு உற்­பத்தி வரி மற்றும் வாட் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இதனால் ஒவ்­வொரு மாநி­லத்­திலும் ஒரு விலை இருக்­கி­றது: உத்­தர பிர­தேசம், 64.40 ரூபாய், மத்­திய பிர­தேசம், 60.24 ரூபாய், ஹரித்வார், 65.12 ரூபாய், ஐத­ராபாத், 64.65 ரூபாய். ஆனால்,ஜி.எஸ்.டி., முறையில் எல்லா மாநி­லங்­க­ளிலும் ஒரே விலை இருக்கும் என்­ப­தோடு சில மாநி­லங்­களில் விலையும் குறையும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)