பதிவு செய்த நாள்
08 ஆக2016
07:23

சென்னை : ‘‘இந்தியா, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு, மிக முக்கிய சந்தையாக திகழ்கிறது; குறிப்பாக, கார் விற்பனையில் வேகமான வளர்ச்சிக்கு, தென்னிந்தியா துணை புரிந்து வருகிறது,’’ என, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய விற்பனை மேலாளர் ஸ்வென் ஜே.ரிட்டர் தெரிவித்தார். அவர், சென்னையில் நடைபெற்ற விழாவில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய, ‘டான்’ காரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, உலகளவில் வரவேற்பு உள்ளது. பாரம்பரியமான நிறுவனத்தில் இருந்து, அனுபவமுள்ள பொறியாளர்களின் கைவண்ணத்தில் உருவான ‘டான்’ கார், 80 சதவீதம் புதுமையான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 6.25 கோடி ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த காரின் டயர் பகுதி கூட, சிறப்பு வடிவமைப்பைக் கொண்டது. டான், 20 நொடிகளுக்குள், 50 கி.மீ., வேகத்தை எட்டக் கூடியது. அந்த நிலையிலும், பயணிகளுக்கு, மெல்லிய சப்தம் கூட கேட்காத வகையில், சிறப்பு கவனத்துடன்,தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சூப்பர் ஆடம்பர பொருட்களுக்கான சந்தைக்கும், தென்னிந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதன்படி, தென்னிந்தியாவில், டான் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என, நம்புகிறோம். இதையொட்டியே, சென்னை, ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களில், டான் அறிமுக உலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|