பதிவு செய்த நாள்
08 ஆக2016
13:55

ஐதராபாத் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம் வைர அகழ்வாராய்ச்சிக்கான அனுமதியை மத்திய அரசின் வன ஆலோசனை குழுவிடமிருந்து பெற்றுள்ளது.
என்.எம்.டி.சி., என அழைக்கப்படும் தேசிய கனிம மேம்பாட்டு கழகம், ஆந்திர மாநிலத்தில் வைர அகழ்வாராய்ச்சிக்கான அனுமதியை மத்திய அரசின் வன ஆலோசனை குழுவிடமிருந்து பெற்றுள்ளது. இதையடுத்து அரசுக்கு சொந்தமான என்.எம்.டி.சி., நிறுவனம், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலிருக்கும் கல்யான்துர்க் வனப்பகுதியில் வைர அகழ்வாராய்ச்சி செய்ய முடியும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்நிலை குழுவான, வன ஆலோசனைக் குழு, சில நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. வனப்பகுதியை மாற்றுவதற்காக இல்லாமல், வனத்துக்குள் அகழ்வாராய்ச்சிக்காக நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்.எம்.டி.சி., நிறுவனம் 153 ஹெக்டேர் பரப்பளவில் 64 இடங்களில் ஆழ்துளையிட்டு வைர ஆராய்ச்சியில் ஈடுபடும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|